பொன்னேரியில் ரயில் சேவை பாதிப்பு..!! போராட்டத்தில் மக்கள்..!!
எண்ணூர் ரயில் நிலையம் அருகே இன்று காலை மின்சாரம் கடத்தி செல்லும் உயர் அழுத்த மின்கம்பியில் இருந்து ரயில்களை இயக்க வைக்கும் கொக்கி பழுதடைந்துள்ளது இதனால் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப் பட்டுள்ளது.
எனவே கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் புறநகர் ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறநகர் ரயில்கள், விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில்கள் நின்றுள்ளது.
காலை முதல் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்லக் கூடியவர்கள், ரயில்வே பல சரக்கு விற்பானையாளர்கள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரயில் இடைப்பட்ட எந்த ரயில் நிலையத்திலும் நிற்காது.., பொன்னேரியில் புறப்படும் புறநகர் ரயில் சென்னை கடற்கரையில் மட்டுமே நிற்கும் என ரயில்வே அறிவித்துள்ளது.
இதில் இடைப்பட்ட ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள் மற்றும் சென்னை சென்ட்ரல் செல்ல வேண்டிய பயணிகள் ஆத்திரமடைந்து ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மழை என்றாலும் இதே பிரச்சனை தான், மழைக்காலம் இல்லா விட்டாலும் இதே பிரச்சனை தான், தினமும் இந்த மார்க்கம் வழியே செல்லும் ரயில்கள் கால தாமதமாக வருவது.., 30 நிமிடத்திற்கும் மேல் சிக்கனிலில் நிற்பது என சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிபூண்டி வழியே செல்லும் ரயில்களுக்கு மட்டும் தான் நடக்கிறது என ரயில் பயணிகள் ரயில்வே அதிகாரிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டு மணி நேரத்திற்கு பின்னரே ரயில்வே அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை தகர்த்துள்ளனர்.
Discussion about this post