பேருந்து மீது ஏறி பயணிகளுக்கு சிரமம் கொடுத்த கல்லூரி ரூட் தலைகளுக்கு சரியான தண்டனை கொடுத்த போலீசார்..!!
இரண்டு நாட்களுக்கு முன், படிக்க செல்கிறோம் என்பதையே மறந்து.., 56A பேருந்தின் மேல் ஏறி நின்று கெத்து காட்டிய கல்லூரி மாணவர்கள்.., நாங்கள் கல்லூரி மாணவர்கள் என்பதை விட நாங்கள் புள்ளைங்கோ என்று சொல்லி சுற்றி திரிந்துள்ளனர். பேருந்து ஓட்டுநர் கேட்டும் அசையாத அந்த கல்லூரி கெத்து புள்ளிங்கோ.., பேருந்தை எடுக்க விடாமல் அட்டகாசம் செய்து உள்ளனர்.
இப்போது எது செய்தாலும் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் விடுவதையே வேலையாக வைத்துள்ளனர். இந்த செயல் பின்னாடி அவர்களுக்கே விபரீதமாகும் என்பதை அறியாமல். அப்படி பேருந்தின் மேல் ஏறி நின்று அட்டகாசம் செய்து வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த வண்ணாரப்பேட்டை போலீசார்.., வீடியோவில் இருந்த “தியாகராய கல்லூரி மாணவர்களை” பிடித்து துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி முன் நிறுத்தினர்.., துணை ஆணையர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் எதிர்காலம் பாதித்து விடும் என்பதால்.., வழக்கு பதிவு செய்யவில்லை.
இருந்தும் சக பயணிகள், ஓட்டுநர்கள், மற்றும் பொது மக்களுக்கு இடையூறு அளித்து போக்குவரத்து காவல் துறையினருக்கு சிரமம் கொடுத்தற்காக துணை ஆணையர் போக்குவரத்து காவலர்களின் சிரமம் தெரிய வேண்டும் என்பதற்காகவும்.., ஒரு நாள் முழுவதும் சாலையில் போக்குவரத்து காவலர்களுடன் நின்று போக்குவரத்தை சீர் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
துணை ஆணையரின் உத்தரவிற்க் இனங்க அந்த புள்ளைங்கோ மாணவர்களும், ஒரு நாள் முழுவதும் பேஷன் பிரிட்ஜ் சாலையில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பின்னாவது திருந்துவார்கள் என்று பார்த்தால் அதையும் வீடியோவாக எடுத்து தண்டனையை மறைத்து.., புள்ளிங்கோ இப்போது சமூக சேவையில் உள்ளோம் ப்ளீஸ் டோன்ட் டிஸ்டப் என வீடியோ வெளியிட்டுள்ளனர்.
Discussion about this post