தக்காளி விலையில் மாற்றம் இன்று ஒரு கிலோ தக்காளி..?
கடந்த சில நாட்களாக தங்கம் விலையை போல தக்காளியின் விலை நாளொன்றுக்கு உயர்ந்து கொண்டே இருந்தது.., வடமாநில பகுதிகளில் ஏற்பட்ட மழையின் காரணமாக தமிழ்நாட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.., எனவே கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தாக்களி 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது தக்காளி விலை குறைந்துள்ளது., இதனால் இல்லத்தரசிகள் மற்றும் ஹோட்டல் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை கிலோ 85 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ தாக்களி 105 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இரண்டு நாட்களுக்கு முன் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய்க்கும் சில்லறை விலையில் 105 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது தக்காளி விலை உயர்ந்து, கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை 130 ரூபாய்க்கும் சில்லறை விலையில் 150 ரூபாய்க்கும்,
ஒரு கிலோ இஞ்சி 250 ரூபாய்க்கும்,
சின்ன வெங்காயம் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Discussion about this post