Thursday, May 22, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இளையராஜா-மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு பிரச்சனைக்கு கிடைத்த தீர்வு! .

மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹி,பாபு சாகிர் மற்றும் பலர் நடித்துள்ளனர்

by Admin
August 4, 2024

இளையராஜா-மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு பிரச்சனைக்கு கிடைத்த தீர்வு!

இளையராஜா:

தமிழ் திரையுலகிற்கு என்னற்ற பாடல்களை கொடுத்துள்ளார். அன்னக்கிளி திரைப்படத்தில் இசையமத்ததன் மூலம் அறிமுகமான இவர் இதுவரை 1000 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீப தினங்களாகவே இவர் பல்வேறு சர்ச்சையை கிலப்பி வருகிறார்.

கூலி திரைப்படம்:

இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடது என தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் அறிமுக டீசரில் தனது பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதன்பின்னர் அவருக்கும் வைரமுத்துவிற்கும் இடையே ஏற்பட்டுவரும் பிரச்சனை என தமிழ் சினிமாவில் பூகம்பமாக வெடித்து வந்தது. தற்போது மீண்டும் புதிய பிரச்சனையாக மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக  கூறி படக்குழுவிற்கு இளையராஜா நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

மஞ்சும்மல் பாய்ஸ்:

மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹி,பாபு சாகிர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மலையாளத்தில் வெளியான இப்படத்தை மொழிகளை கடந்து பலரும் பாரட்டி வருகின்றனர். கொடைக்கனாலில் உள்ள குணா குகையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் நடிகர் கமல் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான குணா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காதல் பாடலான கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.

இந்த படத்தில் நட்புக்கு உரிய பாடலாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். மேலும் இந்த தலைமுறை இசை ஆர்வலர்களிடையே பாடலை மீண்டும் பிரபலமாக்க காரணமாக அமைந்தது.

படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன்.. என்ற பாடல் இளையராஜா இசையமைப்பில் உருவான மிகப் பெறிய காதல் பாடல் ஆகும். இந்த பாடல் தான் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மிகப்பெரிய வரவேற்பை பெற  முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

இளையராஜா நோட்டிஸ்:

இந்தநிலையில்  மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் அனுமதியின்றி குணா பட பாடலை பயன்படுத்தியாக கூறி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் குணா படத்தில் இடம்பெற்ற தன்னுடைய பாடலை பயன்படுத்தியதற்காகவும், அதற்கு முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் மஞ்சும்மேல் பாய்ஸ் உரிமையை பெறாததற்காக இழப்பீடு கோரி தயாரிப்பாளர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ  நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உரிய இழப்பீடு தரவேண்டும்:

பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் மேலும் படத்தில் இருந்து பாடலை நீக்க வேண்டும் என்றும் நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த படக்குழு மற்றும் நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

நேரில் சந்தித்த படக்குழு:

நோட்டீஸ் கிடைத்ததும் மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் இளையராஜாவை நேரில் சந்தித்தனர். படத்தின் வெற்றியைக் கருத்தில் கொண்ட இளையராஜா இழப்பீடாக ரூ.2 கோடி கேட்டார். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே கடும் பேச்சு வார்த்தை நடைப்பெற்றது.

முடிவுக்கு வந்த பிரச்சனை:

இறுதியாக இந்த பேச்சு வார்த்தயைில் ரூ.60 லட்சத்திற்கு ஒப்பந்தம் முடிவடைந்தது. மேலும் மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் அந்தத் தொகையை செலுத்தி சட்டச் சிக்கலைத் தீர்த்துள்ளானர். இதனால் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடத்தப்படாமல் வீட்டிலேயே பேச்சு வார்த்தையில் முடித்து கொண்டனர்.

-பவானி கார்த்திக்

Tags: #ilaiyaraja#Manjumal Boysஇளையராஜாஇளையராஜா-மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுகுணா குகை
ADVERTISEMENT

Related Posts

சினிமா

நடிகர் சூரி தம்பி திருடினாரா? – கலெக்டரிடம் புகார்

actor vishal marriage date
சினிமா

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

சினிமா

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

Next Post
MADHIMUGAM NEWS

நெல்லையின் புதிய மேயர் பெயரை அறிவித்த அமைச்சர்கள்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

Trending News

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.