அரியலூரில் தொடரும் ஆள் கடத்தல்..!! அரியலூர் மக்களே கவனத்திற்கு..!!
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஜமீன் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவா இவரிடம், விழுப்புரம் மாவட்டம் வி.மருதூர் கிராமத்தை சேர்ந்த தாமோதரனிடம் என்பவர், ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 11 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.
இதில் ஏமாற்றத்தை உணர்ந்த சிவா அரியலூர் இணைய குற்ற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், தாமோதரன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், தாமோதரன் வாங்கிய பணத்தில் பெரும் பங்கை பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மனீஷ்குமார் பாண்டே என்பவரின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது கணக்கை போலீஸார் முடக்கினர்.
மேலும் மனீஷ்குமார் பாண்டே மற்றும் அவரது தம்பி மிதுன்பாண்டே ஆகியோர் அரியலூருக்கு வந்து கணக்கு முடக்கம் மற்றும் வழக்கு தொடர்பாக காவல் துறை விசாரணைக்கு வந்தனர்.
இந்நிலையில், ஜாமினில் வெளிவந்துள்ள தாமோதரன் மற்றும் அவரது நண்பர்கள் அரியலூர் ரயில் நிலையத்தில் நின்ற மனீஷ் குமார் பாண்டேவை நேற்று முன்தினம் மாலை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து, மிதுன்பாண்டே அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், மனீஷ்குமார் பாண்டேவை கடத்திச் சென்ற தாமோதரன், பெரம்பலூரில் உள்ள ஒரு உணவகத்தில் தங்க வைத்தும், மறுபடி அரியலூர் அருகே உள்ள ஒரு சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் கைகளை கட்டி காரில் வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த சுரங்கப்பகுதிக்கு சென்ற அரியலூர் போலீஸார், மனீஷ்குமார் பாண்டே மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட தாமோதரன், அவரது நண்பர்கள் ஐஸ்டீன், ராம்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..