இந்தியாவிற்கு எந்த பெயர் வந்தாலும் நாங்கள் ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் வ.உ.சி மைதானத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முடிவற்ற பணிகளை, அமைச்சர் கே.என் நேரு மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு,
கோவை மாநகரில் 280 கிமீ சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கி உள்ளோம். உ.பி சாமியார் சும்மா உளருகிறார். அது எல்லாம் பெருசு படுத்தக்கூடாது. அதற்கு அமைச்சர் உதயநிதியும் தலையை சீவ 10 கோடி வேணாம், 10 ரூபாய் சீப்பு போதும் என சொல்லிவிட்டார். இன்று நேற்றாக திராவிடக் கொள்கையை பேசி வருகிறோம்.. 100 வருடங்களாக பேசி வருகிறோம்.
இந்தியாவிற்கு பெயர் எது வந்தாலும் நாங்கள் ஒன்றிய அரசு என்று தான் சொல்வோம். இதனை திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தெளிவாக நாடாளுமன்றத்திலையே விளக்கி இருந்தார்.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லாத ஒன்று, தேர்தல் ஆணையம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவித்து சென்றார்.