வண்டலூர் சுற்றுலா தளத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்..!! வெளியான அதிர்ச்சி காரணம்..!!
சென்னை தாம்பரம் வண்டலூரில் அமைந்துள்ள “அறிஞ்சர் அண்ணா உயிரியல் பூங்காவில்” சிங்கம், புலி, கரடி, கழுதைப்புலி, மான், பாம்பு வகைகள், குரங்குகள், முதலைகள் மற்றும் யானைகள் என பல வனவிலங்குகள் வண்டலூர் பூங்காவில் உள்ளது.
இதனை கண்டு கழிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து கண்டு கழித்து பொழுதுபோக்குவது உண்டு.
இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காகவும், வளர்ச்சிப் பணிகளுக்காக பூங்காவின் நுழைவுக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை கடந்த ஆண்டு தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் :
அதாவது பெரியவர்களுக்கு நுழைவுக் கட்டணம் 115 ரூபாயிலிருந்து 200 ரூபாய் ஆகவும், பேட்டரி வாகன கட்டணம் 100 ரூ லிருந்து 150 ரூ ஆகவும், சஃபாரி வாகன கட்டணம் 50 ரூ. லிருந்து 150 ரூ ஆகவும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் குழுவாக வந்தால் 5 முதல் 17 வயதுவரை உள்ள மாணவர்களுக்கு 20 ரூபாய் ஆகவும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
மற்றும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. என்றும் சக்கர நாற்காலிக்கான கட்டணம் 25 ரூபாயும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், மற்றும் 4 சக்கர வாகனங்கள், மினி வேன், டெம்போ, மினி பேருந்துகள் நிறுத்தப்படுவதற்கான கட்டணம் மணிக் கணக்கில் இருந்து நாள் கணக்கிற்கும் மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் இந்த கட்டணம் மாற்றம் குறித்து பலருக்கும் தெரியாததால்.., தற்போது வண்டலூர் உயிரியில் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதே சமயம் இன்று காலை பூங்காவை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணி ஒருவர் உடல் ஊனமுற்று இருப்பதால் நாற்காலி வாகனம் கேட்டுள்ளார்.
@supriyasahuias Mam ,Just because disable people couldn't afford for battery vehicle inside vandalur zoo, all these disable people had to come back homes without seeing the vandalur zoo. Government given scooters were not allowed, just one or two wheel chair were only available pic.twitter.com/lKTZbyGW6u
— பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN) May 20, 2024
சக்கர நாற்காலியும், ஊனமுற்றோருக்கான ஸ்கூட்டரும் இல்லாத நிலையில் 150 ரூபாய் கொடுக்க மனம் இல்லாத சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவர்களின் நிலையை புரிந்த கொண்ட சமூக ஆர்வலரான பேராசிரியர் தீபக் நாதன் இதுகுறித்து சமூக வலைத்தளமான எக்ஸ் இணையத்தளம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ