முதலில் சிறைக்கு செல்லப்போவது மோடி..! இளையராஜா பேராசையில் கேட்ட பணம்..!! சீமான் பேட்டி..!
சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஊடக நிறுவன அலுவலகத்தின் திறப்பு விழாவிற்காக வருகை தந்திருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மற்றும் இயக்குனர் அமீர், நடிகர் தம்பி ராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், “ஜூன் 4ஆம் தேதி ஆட்சி அமைந்தவுடன் ஊழல்வாதிகளை நாங்கள் சிறைக்கு அனுப்புவோம் என்று பிரதமர் மோடி கூறியது குறித்த சீமானிடம் கேட்டதற்கு, அப்போ மோடி தான் முதலில் சிறைக்கு செல்ல வேண்டும் என பதில் அளித்துள்ளார்.
தேர்தல் பத்திரத்தில் 6,600 கோடிக்கு மேலாக பணம் பெற்றுள்ளனர். அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் மூலமாகவும் பணம் வாங்கி உள்ளார். தமிழ்நாட்டு மக்களை மோடி எந்த அளவுக்கு நடத்துகிறார் என்பது மக்களுக்கு தெரியாதா..?
பேரிடர் காலங்களில் மோடி எந்த ஒரு அறிக்கையும் விடவில்லை, ஆறுதலும் கூறவில்லை.., அவமதிக்கிறார்கள் என்றால் என்ன செய்திருக்க வேண்டும்., மக்களுக்காக ஏதாவது ஒரு நன்மையாவது செய்திருக்க வேண்டும் .
ஆனால் மோடி தமிழகத்திற்கு வரும்போது எல்லாம், எல்லோரும் அவரின் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என நினைக்கிறார்.
60 ஆண்டு 70 ஆண்டு காலம் வாழ்ந்து மின் இணைப்பு, குடும்ப அட்டை, எரிவாயு இணைப்பு உள்ளது. சாலை போட்டுள்ளார்கள், வீட்டு வரி வாங்கி உள்ளார்கள். 60 ஆண்டுகள் கழித்து இப்போது தான் தமிழகத்தில் பல நிலங்கள் ஆக்கிரமிப்பு என அவருக்கு தெரிகிறதா..?
அரசு ஆக்கிரமித்ததை பற்றி சொல்ல வேண்டும் என்றால்.., வள்ளுவர் கோட்டமே ஏரி உள்ள இடம் தான். திடீரென்று ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வள்ளுவர் கோட்டம் உள்ள இடத்தை அப்புறப்படுத்துவது நியாமில்லை என சீமான் கூறினார்.
இளையராஜா – வைரமுத்து சர்ச்சை :
சில நாட்களுக்கு முன் இளையராஜா வைரமுத்து குறித்து ஒரு சர்ச்சை வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.., அதுபற்றி சீமானிடம் கேட்டதற்கு..?
அவர் கூறியதாவது, தற்போது வரும் திரைப்படங்கள் முன் மாதிரி இல்லை.., ஒரு முறை படத்தை தொலைக்காட்சிக்கு கொடுத்துவிட்டால் பல ஆண்டுகளுக்கு உரிமம் வைத்து கொள்கிறார்கள். இதனால் தயாரிப்பாளருக்கும், படைப்பாளருக்கும் தொகையாக எதுவும் செல்வது கிடையாது.
முதல் மரியாதை படத்திற்காக இளையராஜாவிற்கு அந்த காலத்திலேயே இரண்டு லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. ஆனால், படம் ஓடுமா..? ஓடாதா..? என தெரியாது.. இதனால் அந்த பணத்தை நான் வாங்க மாட்டேன் என கூறி இளையராஜா மறுத்து விட்டார்.
முன்னெல்லாம் வானொலியில் பாட்டை ஒலிபரப்ப செய்ய வேண்டும் என்றால், ராயலிட்டி வழங்கப்பட வேண்டும். ஆனால், இப்போது அது கொடுப்பதில்லை, தவறாக அர்த்தம் புரிந்தவர்கள் இளையராஜா பேராசையில் பணம் கேட்கிறார் என நினைக்கிறார்கள். அவர் பணம் கேட்டதற்கான காரணம் இது தான் என சீமான் கூறியுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..