சூப்பர் ஸ்டாரின் ரீ-ரிலீஸ் படம்..? ரஜினிகாந்த் அளித்த பேட்டி..? உற்சாகத்தில் ரசிகர்கள்..!
இயக்கநர் கைலாசம், பாலச்சந்தர் இயக்கத்தில் அபூற்வ ராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். நடிப்பது மட்டுமின்றி சில திரைப்படங்களில் தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். அதில் நான்கு முறை சிறந்த நடிகருக்கான விருதும், இரண்டுமுறை சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதினையும் பெற்றுள்ளார்.
அடையாளம் காட்டிய மூன்று முடிச்சி :
மூன்ற முடிச்சி திரைப்படத்தில் பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்திருந்தது பலரையும் கவர்ந்துள்ளதால் அவரது நடிப்பு சிறந்ந நடிகராக அடையாளம் காட்டியது.
90களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்சா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்றன.
கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் எனப் பலரும் நடித்துள்ளனர்.
1996-ல் வெளியான இந்தியன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. 210 பிரிண்டுகள் மற்றும் 700,000 ஆடியோ கேசட்டுகளுடன் உலகம் முழுவதும் வெளியான முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும்.
தமிழ் சினிமாவிலேயே அதிக வசூல் செய்த படம். ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பாராட்டு குறியது, மேலும் இப்படம் ஐந்து விருதுகளையும் பெற்றுள்ளது.
ரீரிலீஸ் என்பது தமிழ் சினிமாவில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதாவது குறிப்பிட்ட நடிகர்கள் நடித்து ஹிட் அடித்துள்ள பழைய திரைப்படங்களை தேடி தற்போது மீண்டும் திரையரங்கிள் ரிலீஸ் செய்கின்றனர். அந்த வகையில் சமிபத்தில் வெளியிடப்பட்ட கில்லி திரைப்படம் 25 நாட்களை கடந்து ஓடியதுடன் சுமார் 30 கோடி வசூலையும் வாரி குவித்துள்ளது.
இந்நிலையில் ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான “படையப்பா” படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் கோகுலம் ஸ்டுடியோவில் வேட்டையன் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த தேனப்பன் சினிமா தொடர்பாக பல விஷயங்களை பரிமாறிக் கொண்டனர். அப்போது படையப்பா ரீ-ரிலீஸ் பற்றியும் தேனப்பன் பேசியுள்ளார்.
அதற்கு ரஜினியும் மகிழ்ச்சியாக தாரளமாக செய்யுங்கள் என தெரிவித்துள்ளார். “26 ஆண்டுகளுக்கு பின் ரஜினியை சந்தித்தது மகிழ்ச்சி. பாசத்திலும், நட்பிலும், மரியாதையிலும் துளியும் அவர் குறையவில்லை, அப்படியே தான் இருக்கிறார்” என தேனப்பன் கூறியுள்ளார்.
படம் எப்போது ரீ – ரிலிஸ் செய்யபடும் என்பது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது..
-பவானி கார்த்திக்