இன்றைய ராசிபலன்…!! பணவரவு அதிஷ்டம் யாருக்கு தெரியுமா..?
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு உத்தியோக பணியில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். போட்டித் தேர்வில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வழக்கு விஷயத்தால் அலைச்சல் உண்டாகும். கடன் உதவி கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் புதிய வாய்ப்பு ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு கலை மற்றும் சினிமா விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். விவசாயத்திற்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். கல்வி பணியில் நுட்பமான விஷயத்தை அறிந்து செயல்படுவீர்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர். சிறு தொழில் வியாபாரத்தில் லாபம் மேம்படும். மனதில் இருந்து வந்த கவலை குறையும். எந்த செயலையும் திட்டமிட்டுச் செயல்படுத்தவும். கடன் பிரச்சனைகள் குறையும். எழுத்து பணியில் இருப்பவர்களுக்கு புது வாய்ப்பு அமையும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு புதிய தொழில்நுட்ப விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு உண்டாகும். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனை மேம்படும். இழுபறியான தனவரவு வந்து சேரும். தோற்றப்பொலிவு அதிகரிக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிப்பீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். மனதில் இருந்த கவலை நீங்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மற்றவர்கள் பற்றி கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவும். பழைய சிந்தனைகள் மூலம் மனதில் அமைதி ஏற்படும். மற்றவர்களின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வரவுக்கேற்ற செலவு இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கனிவான பேச்சால் நன்மை ஏற்படும். மற்றவர்களுக்கு ஜாமீன் தருவதை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத விரயங்கள் உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு உறவினர்களின் ஒத்துழைப்பால் பிரச்சனை குறையும். தேவையற்ற விவாதத்தை குறைக்கவும். வியாபார பணியில் லாபம் மேம்படும். திடீர் பணவரவு உண்டாகும். கணவன் – மனைவி இடையே புரிதல் ஏற்படும். தொழில் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வாகன பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு ஆராய்ச்சி பணியில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிர்வாகத் திறமை வெளிப்படும். புதிய முயற்சியில் அனுபவம் கிடைக்கும். வேலையாட்கள் மாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் சூழல் அமையும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நிர்வாக மாற்றங்களை சிந்தித்து மேற்கொள்ளவும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு வியாபார பணியில் விவேகம் வேண்டும். மனதளவில் தடுமாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். எதிலும் சிந்தித்துச் செயல்படவும். நினைத்த காரியங்களில் மாற்றம் உண்டாகலாம். சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு கல்லூரி நண்பர்களின் தொடர்பு ஏற்படும். குழந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனை குறையும். கணவன் – மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் உண்டாகும். உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். குழப்பம் விலகும். பூர்வீக சொத்தால் ஆதாயம் கிடைக்கும்.