சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை..! பரிதவிக்கும் மக்கள்..! போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதிகள்..!
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது..
பரிதவிக்கும் வடசென்னை மக்கள் :
அதன் படி நேற்று இரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.. குறிப்பாக சென்னையில் கொருக்குப்பேட்டை., தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, திருவொற்றியூர், காசிமேடு மற்றும் மணலி, அதேபோல் கொடுங்கையூர், மயிலாப்பூர், அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளது.
போக்கு வரத்து மாற்றம் :
நேற்று இரவு பெய்த தொடர் கனமழையால் சென்னையின் பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது.. இதனால் போரூர்., ஆவடி, மற்றும் கொரட்டூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..