சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக 44 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகி வருகிறது.
இன்றைய நிலவரப்படி (மார்ச் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 5,645 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 44,520 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 49 ரூபாய் அதிகரித்து 6,038 ரூபாய்க்கும், சவரனுக்கு 392 ரூபாய் அதிகரித்து 48,304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 20 காசுகள் அதிகரித்து 76 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோவிற்கு 200 ரூபாய் அதிகரித்து 76 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்தாலும் இந்திய மார்க்கெட்டில் அதற்கான தேவை அதிகரித்துள்ளது விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்தியாவிற்கு அதிக அளவிலான தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மத்திய பட்ஜெட்டின் போது இறக்குமதி தங்கம் மீதான சுங்கவரி அதிகரிக்கப்பட்டது. இதன் விளைவாக சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்தாலும் உள்நாட்டில் விதிக்கப்படும் சில வரிகள் காரணமாக விலை அதிகரித்து காணப்படுகிறது.
Discussion about this post