கேரளாவில் நடைபெற்ற வினோதத் திருவிழா ஒன்றில் ஆண்கள் பெண் வேடமிட்டு பங்கேற்ற வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையத்தில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது கோட்டங்குலங்கரா தேவி கோயில் (Kottankulangara Devi Temple). இந்தக் கோயிலில் பகவதி தேவி சுயம்புவாக தோன்றியதாகக் கூறப்படுகிறது. எனவே, ஆண்டுதோறும் இந்தக் கோயிலில் நடைபெறும் சமயவிளக்கு (Chamayavilakku) திருவிழாவில், ஆண்கள், பெண் வேடமிட்டு பங்கேற்பது வழக்கமாக உள்ளது.
பெண் வேடமிட்டு ஆண்கள் பகவதி தேவியை வழிபடுவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை. எனவே, பெண் வேடமிட்ட ஆண்கள், பாரம்பரிய விளக்குகளை ஏந்தி, பூக்களால் சிறப்பு பூஜை செய்து தேவியை வழிபடுகின்றனர்.
ஒவ்வோரு ஆண்டும் இத்திருவிழாவில் பங்கேற்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறுகிறார்கள், இந்தக் கோயிலுக்கு வரும் ஆண்களுக்கு, பெண் வேடமிட என்றே, இந்தக் கோயிலின் வாசலில் ஒப்பனைக் கலைஞர்களும் இருக்கிறார்கள். இவர்கள் ஆண்களை அப்படியே தத்ரூபமாக பெண்கள் போன்று தங்கள் ஒப்பனையால் மாற்றி விடுகின்றனர். சில ஆண்கள் வீட்டில் இருந்தே, பெண் வேடத்துடனேயே இந்தக் கோயிலுக்கு வருகின்றனர்.
இது சம்பந்தமான போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெண்களே பொறாமை கொல்லும் அளவிற்கு பேரழகுடன் இருப்பதாக ஆண்களுக்கு கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
ஆண்கள்னு சொல்லுறாங்க அப்பறம் எப்படி நேச்சுரலா இருக்க மாதிரி இருக்கு. தெரிஞ்சவங்க சொல்லுங்க…. pic.twitter.com/DQ39mtBnm5
— காக்கா (@kaka_offic) March 29, 2023
Discussion about this post