World Idli Day: என்னது இட்லியோட சொந்த ஊரு இந்தியா இல்லையா? – உண்மையான பிறப்பிடம் இதோ!
தோசை, உப்புமா, பூரி, பொங்கல் என வெரைட்டிகள் இருந்தாலும் தென்னிந்தியாவின் பிரதான உணவாக இட்லி திகழ்கிறது. எளிதில் ஜீரணிக்க கூடியதாகவும், சுவையானதாகவும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பக்கூடிய உணவாக உள்ளது. சோம்பலாக இருப்பவர்களுக்கும் இட்லி ஒரு உற்சாக அமுதம். அதனால்தான்.. இட்லிக்கு இவ்வளவு கிராக்கி… இந்தியாவில் அவ்வளவு பிடிக்கிறது.
இந்தோனேஷியாவில் பிறந்த இட்லி:
இந்தியாவில் எந்த மாநிலத்திலத்திற்கு சென்றாலும் எளிதில் கிடைக்கக்கூடிய இட்லியானது, நம் நாட்டில் பிறக்கவில்லை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். ஆமாங்க, இட்லி பொதுவாக தென்னக உணவாக கருதப்படுகிறது. ஆனால், கேட்டி ஆச்சார்யா என்ற உணவு வரலாற்றாசிரியர் இட்லி இந்தோனேசியாவில் பிறந்ததாக கூறுகிறார்.
ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்ட இந்து மன்னர்கள் சமையல் செய்முறையை கண்டுபிடித்தனர். இதன் ஒரு பகுதியாக, இட்லி தயாரிக்கத் துவங்கினர். 800 – 1200 இல் இட்லி இந்தியாவில் நுழைந்தது. இந்தியாவில் முதன்முதலில் கர்நாடகாவில் இட்லிகள் தயாரிக்கப்பட்டன, அவை ‘இட்டலிகே’ என்று அழைக்கப்பட்டன. இவை சமஸ்கிருதத்தில் ‘இத்தாரிகா’ என்று அழைக்கப்பட்டன.
அரிசி உருண்டை டூ இட்லி:
அரேபியர்களின் ‘அரிசி உருண்டை’.. இன்றைய இட்லியாக மாறியதாக கூறப்படுகிறது. எனினும், கெய்ரோவில் உள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக் கழக நூலகத்தில் உள்ள குறிப்புகளின்படி.. தென்பகுதிகளில் வாழ்ந்த அரேபிய வணிகர்கள் இட்லியை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. அங்கிருந்து தென்னிந்தியாவிற்கு திருமணம் செய்து வந்த பெண்கள் மூலமாக இங்கு இட்லி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
அரேபியர்கள் ஹலாம் என்ற வேகவைத்த அரிசி உருண்டைகளை சாப்பிட்டு வந்துள்ளனர். இஸ்லாமியர்களின் முக்கிய உணவுகளில் ஒன்றாக திகழ்ந்துவந்த இது காலப்போக்கில் இட்லியாக வடிவம் பெற்று, தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடப்பட்டுள்ளது.
8 ஆம் நூற்றாண்டிலிருந்து அந்த அரிசி உருண்டைகள் இட்லி என்ற பெயரில் பிரபலமடைந்து நாடு முழுவதும் பரவியதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அது எப்போது பிறந்தாலும்.. எங்கு பிறந்தாலும் சரி.. இட்லி இந்தியாவுக்கே சொந்தம் என்று உலகமே பலமாக நம்புகிறது. இந்தியர்களும் அதையே நம்புகிறார்கள். மேலும், இந்த இட்லி சர்வதேச அளவில் இந்திய உணவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்று ‘உலக இட்லி தினம்’.. அனைத்து விதமான இட்லி அல்லது சட்னிகளையும் செய்து அசத்துங்கள்….
Discussion about this post