வரலாறு காணாத உச்சமாக கடந்த இரண்டே நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,240 ரூபாய் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, (ஏப்ரல் 5) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 90 ரூபாய் அதிகரித்து 5,690 ரூபாயாகவும், சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து 45,520 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 90 ரூபாய் அதிகரித்து 6,167 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து 49,336 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று வழக்கத்தை விட அதிகமாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 2 ரூபாய் 90 காசுகள் உயர்ந்து 80 ரூபாய் 70 காசுகளுக்கும், கிலோவிற்கு 2 ஆயிரத்து 900 ரூபாய் அதிகரித்து 80 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
Discussion about this post