நீங்க பார்க்க மற்றும் படிக்க மறந்த முக்கிய செய்தியை பார்க்க.. ஜஸ்ட் ஒரு க்ளிக்…!
1. தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நீரை உடனே விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரை வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
2. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் இந்தியா கூட்டணியுடன் ஒருங்கிணைந்து, குரல் எழுப்ப முடிவு.., திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..
3. அதிகாரிகள் வாரத்தில் 2 முறையாவது மருத்துவமனைகளை ஆய்வு செய்ய வேண்டும்.. டெங்கு ஒழிப்பு கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் வேண்டுகோள்..
4. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு.., திட்டத்தில் நிராகரிக்கப்பட்டோர் 18 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க அனுமதி
5. தெலங்கானா பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அக்டோபர் 24-ல் தொடக்கம்… அம்மாநில அரசு அரசாணை வெளியிடு..
Discussion about this post