4048 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மாநில அளவிலான மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் சுகாதார துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி,சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு திட்ட இயக்குனர் சில்பா பிராபாகர்,பொதுசுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயாகம் ,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவ துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மாவட்ட சுகாதார துறை இயக்குனர்கள் ,இணை,துணை இயக்குனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவமனை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் ;
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு உயரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,டெங்கு குறித்து தலைமை செயலாளர் தலைமையிலும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள இணை துணை இயக்குநர்கள், டீன்கள் என 296 மருத்துவ அதிகாரிகளுடன் இன்று மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு தொடர்பாக கூட்டமானது தற்போது நடந்துள்ளதாக பேசியவர் இதில் கொசு மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் எடுக்க அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் உள்ள 12,000 மருத்துவ கட்டமைப்புகளிலும் இவை பின்பற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த ஆண்டு 4048 பேருக்கு டெங்கு பாதிப்பு என்பது அச்சப்பட வேண்டியது இல்லை எனவும் இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து பேசிய அவர் நிஃபா வைரஸை பொறுத்தவரை தமிழகத்தில் எல்லை மாவட்டங்களான 6 மாவட்டங்களிலும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,தமிழகத்தில் இதுவரை நிஃபா வைரஸ் தாக்கம் எங்கும் இல்லை.
திருவாரூர் பயிற்சி மருத்துவ மாணவி சிந்து உயிரிழந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்தவர் உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு ஏற்கனவே பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும்,அவருக்கு டெங்கு போன்ற எந்த வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: இந்தியா கூட்டணி இந்துக்களுக்கு எதிரானதா..? முயற்சி பழிக்காது.. விசிக தலைவர் ..!
Discussion about this post