கூந்தல் வெடிப்பை தடுக்க..! சில டிப்ஸ்
கூந்தல் அடர்த்தியாக இருந்தாலும் அடர்த்தி குறைவாக இருந்தாலும், கூந்தலின் முனை வெடிப்பு விட்டு காணப்படும். அதுமட்டுமின்றி உடைந்த கூந்தலின் முனை கரடாக இருக்கும். அதை எளிதாக சரி செய்ய சில குறிப்புகளை பார்க்கலாம்.
கூந்தல் உதிர்வு மற்றும் வெடிப்பிற்கான காரணம்:
தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பூக்களை மாற்றி மாற்றி பயன் படுத்துவதால் கூந்தல் உதிர்வு ஏற்படுகிறது. தலையை அலசும் பொழுது, கூந்தலின் முனையில் சரியாக அலசாமல் விடுவதும், ஒரு வித காரணமாகும்.
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பொழுது, கூந்தலின் முனையிலும் தேய்க்க வேண்டும். வாரத்தில் இரு முறையாவது தலைக்கு ஆயில் மசாஜ் செய்ய வேண்டும்.
வாரத்தில் மூன்று முறை தலைக்கு குளிக்கலாம். தினமும் தலைக்கு தண்ணீர் ஊற்றுவது கூந்தல் உதிர்வை அதிகரிக்கும்.
தலைக்கு சூடான எண்ணெய் தேய்ப்பதால், முடியின் வேர்கள் உடைக்கப்பட்டு கூந்தல் உதிர்வை அதிகரிக்கும். மூலிகை பொருட்களால், தயாரிக்கப்பட்ட எண்ணெய் உபயோகித்தாலும். சூடாக தேய்க்க கூடாது.
கூந்தல் ஆரோகியமாக இருக்க தேங்காய் எண்ணெய் சிறந்தது. கூந்தல் உதிர்வு பிரச்சனை உள்ளவர்கள், தலைக்கு குளிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன் தேங்காய் எண்ணெய் இட்டு, பின் தலையை அலசலாம்.
வாரத்தில் மூன்று முறை, இதை செய்தால் கூந்தல் உதிர்வு விரைவில் சீராகும்.
கற்றாழை ஜெல்லை கூந்தலில் தேய்த்து, காய்ந்த பின் தலையை அலச வேண்டும்.
அல்லது வாரத்தில் ஒருமுறையாவது கருப்புபயிற், வெந்தையம், தயிர் சேர்த்து அரைத்து தலையில் தடவி இரண்டு மணிநேரம் ஊறவைத்து, தலையை குளிர்ந்த நீரில் ஷாம்பூ விட்டு அலச வேண்டும்.
இவ்வாறு செய்தால் கூந்தல் உதிர்வு, கூந்தல் வெடிப்பு கட்டுக்குள் வரும்.
Discussion about this post