சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வசந்தி திரையரங்கம் அருகே உள்ள பழைய கட்டிடம் மழையின் காரணமாக இடிந்து விபத்துக்குள்ளானது. எழும்பூர், வேப்பேரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
உமர் என்பவருக்கு சொந்தமான இந்த பழமையான கட்டிடத்தில் யாரும் தற்போது குடியிருக்க வில்லை. தரமற்ற கட்டிடம் எனவும், இடிக்க வேண்டும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் மூன்று மாதத்திற்கு முன்பாக கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
நோட்டீஸ் அனுப்பிய போது இதில் குடியிருந்த நபர்கள் இந்த கட்டிடத்தை காலி செய்துவிட்டனர். எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையிலிருந்து இந்த கட்டிடம் ஆனது நேற்று இரவு பெய்த மழையில் உறுதித் தன்மை இழந்து பத்தரை மணி அளவில் இடிந்து விழுந்து உள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. ஓட்டேரி போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டேரி போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தின் காரணமாக பட்டாளம் – பேரக்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.