உங்கள் ஊர் செய்திகள், உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ராமசந்திராபுரம் குடியிருப்பு பகுதியில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் திடீரென பலத்த சத்தத்துடன் தென்னை மரத்தின் மீது இடி விழுந்ததில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பயந்து ஆம்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து பொதுமக்களின் அச்சத்தை போக்கினர்.
கோவை, திருப்பூரில் பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. திருப்பூர் மங்களம் அருகே உள்ள நல்லம்மன் தடுப்பணையில் அதிக வெள்ளம் பெருக்கெடுத்து உள்ளதால் நல்லம்மன் கோவில் மற்றும் கோவிலுக்கு செல்லக்கூடிய சிறு பாலம் மூழ்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நன்னிலம் சென்ற அரசு பேருந்தும் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்த அரசு பேருந்தும், திருவாரூர் சாலை மெயின்ரோட்டில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளனாது. இதில் நன்னிலம் பேருந்து ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மேலும் இரண்டு பேருந்திலும் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர்த்தப்பினர். இந்த விபத்து குறித்து பெரம்பூர் காவல்துரையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருப்பூர் மாநகர காவல் துறை ஆணையர் லட்சுமி அவர்களின் உத்தரவின்படி காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் திருப்பூர் KVR நகர் சரகத்தின் சார்பில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சரக உதவி ஆணையர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள்,காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.