உங்கள் ஊர் செய்திகள், உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
மயிலாடுதுறையில் உள்ள நியாய விலை கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்திட குறியீடு நிர்ணயம் செய்வதை தவிர்த்தும், காலாவதியாகிவிட்ட பொருள்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில், சங்கத்தின் மாவட்ட தலைவர் பரதன் தலைமையில் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் மகேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் ரேபிடோ .ஓலா ,ஊபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களால் ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர் சந்தை மைதானத்தில் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும், பல்வேறு இடங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் நிறைய வியாபாரிகள் தீபாவளி பண்டிகைக்காக ஆடுகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், குண்டு ரெட்டியார் அருகே மரிமாணிகுப்பம் கிராமத்தில், கோகிலா என்பவர், மருத்துவம் படிக்காமலேயே தனது வீட்டின் ஓர் அறையில் கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவ துறையினருக்கு புகார் வந்தன.
புகாரின் பேரில் அரசு மருத்துவமனை மருத்துவர் செல்வநாதன் தலைமையில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து மருத்துவர் செல்வநாதன் கொடுத்த புகாரின் பேரில், காவல்துரையினர் வழக்குப்பதிவு செய்து கோகிலாவை கைது செய்தனர்.
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி சீருடை அணிந்த பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சிலர் புகைபிடிக்கும் காட்சிகளை ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு திடீரென சென்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து பெற்றோர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு ஆட்சியர் மகாபாரதி அறிவுறுத்தினார்.