திருப்பதி லட்டு சர்ச்சை..!! கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினர்…!!
திருப்பதி லட்டுவில் மாட்டுக்கொழுப்பு கலந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி ஆம்பூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் முன்பு தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட இந்து முன்னணியினர்..
புனித திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுவில் உபயோகப்படுத்தபடும் நெய்யில்., மாட்டு கொழுப்பு., பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்த நெய்யை உபயோகபடுத்தி இருப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியது..
இந்த கலப்படம் ஆனது… ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் நடத்தப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்காக குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாடு வாரியத்தின் கீழ் இயங்கும் ஆய்வகதிற்கு லட்டுவின் மாதிரி சாம்பிள்கள் கொண்டு செல்லப்பட்டு உறுதி செய்யப்பட்டது., ஆய்வின் முடிவில் மாட்டு கொழுப்பு., பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்திருப்பது உறுதியானது.., அதன் பின் லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல் நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தான போர்டு பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளது.
இந்நிலையில் திருப்பதி கோவில் புனித தன்மையை மீட்டெடுக்க கோவில் நிர்வாகிகள் பல பூஜைகளை செய்து வந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் முன்பு திருப்பதி லட்டுவில் மாட்டுக்கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி இந்து முன்ணனியினர் தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..