உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு ..!
உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதே சமையம் சில போட்டிகளிலும் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்க உள்ளது.
முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் நியூஸ்லாந் அணியும் மோத உள்ளது. இங்கிலாந்து அணி நியூஸ்லாந்த் அணியை எதிர்கொள்ள உள்ளது,.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து உட்பட 10 நாடுகள் மோத உள்ளது. அதில் ஐந்து நாடுகள் ஆசியாவை சேர்ந்தவை.., கடந்த 10 ஆண்டில் இந்திய அணி ஐசிசி கோப்பை கைப்பற்றதாதல் இந்த முறையாவது கைப்பற்றும் இந்த முறையாவது கைப்பற்றுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் உலககோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10ம் தேதி தொடங்க உள்ளது என கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது கிரிக்கெட் சங்கங்கள் டிக்கெட் விற்பனைக்கான விலை நிர்ணயம் குறித்து ஆலோசித்து வருவதால் டிக்கெட் விலை பற்றி விரைவில் தெரிய வரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ரசிகர்கள் என்றும் பரபரப்பாக எதிர்பார்ப்பது இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் தான்.., ஆகஸ்ட் 15ம் தேதி நடக்க இருக்கும் இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் பின்னர் மாற்றியமைக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஐசிசியிடம் பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். போட்டி நடக்கும் தேதிகள், நேரங்கள் மட்டுமே மாற்றி அமைக்க வாய்ப்புகள் இருக்கும் ஆனால் மைதானங்கள் மாற்றப்படாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.