மிரட்டல் விட்ட பாஜக..! மன்னிப்பு கேட்ட ஓட்டல் உரிமையாளர்..!! தலைவர்கள் கண்டனம்..!!
ஒரே பில்லில் (BILL) 2 ஜிஎஸ்டி :
கோவை கொடிசியாவில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி கோவை தெற்கு எம்எல்ஏவும், பாஜ மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் தலைமையில் தொடங்கியது அதில் மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழில் அதிபர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த கூடத்தில் பங்கேற்ற அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பேசியதாவது, “ஒரே பில்லில் (BILL) ஒரு ஜிஎஸ்டி போட்டுவிட்டு மற்றொரு பொருளை அதோடு சேர்க்க சொல்லும்போது அதற்கு ஒரு ஜிஎஸ்டி என 2 ஜிஎஸ்டி போடுவதால் வாடிக்கையாளர்களிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
உதரணத்திற்கு ஒரு பன் (Bun) வாங்கினால் ஜிஎஸ்டி கிடையாது. அதவே அதற்கு வைத்து சாப்பிடும் க்ரீம் வாங்கினால் 18% ஜிஎஸ்டி வருகிறது. இதனால் கம்ப்யூட்டரும் சில சமயம் திணறுகிறது.” என சொல்லலாம்.. இதை கேட்பவர்களுக்கு “ஆஹா” என இருக்கும். அதுவே மக்களின் பார்வையில் இருந்து யோசிக்கும் போது கடுப்பாக இருக்கும்.. இதுபோன்ற பல உணவுப்பொருள்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கிறது.,
இனிப்பிற்கு 5% ஜிஎஸ்டி காரத்திற்கு 12% ஜிஎஸ்டி என இருக்கிறது., ஓர் கஸ்டமர் இனிப்பு சாப்பிட்டு விட்டு அதன் பின் காரம் சாபிட்டால் அவர்களுக்கு எத்தனை ஜிஎஸ்டி விதிக்க முடியும் இவர் அடிக்கடி பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனைகளையும், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அப்போது, வரிவிதிப்பு பிரச்சனைகள் குறித்து விவாதம் செய்யப்படும்.
இந்நிலையில் அன்னபூர்ணா ஓட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளதாக வீடியோ ஒன்று நேற்று காலையில் வேகமாக பரவியது. அதாவது அந்த வீடியோவில் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோருடன் அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன் இருக்கிறார். அப்போது, அன்னபூர்ணா சீனிவாசன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு பேசுகிறார்.
அவர்களிடம், ‘‘ஓட்டல் அசோசியேசன் சார்பில் என்னை பேச சொன்னார்கள், நான் மீட்டிங்கிற்கு கூட வரவில்லை என்றுதான் சொன்னேன். ஆனால் பேச வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது. நீங்க வயதில் பெரியவங்க, தயவு செய்து மன்னித்து விடுங்கள்’’என்று கூறுகிறார். மன்னித்து விடுங்கள் என்று சொல்லும் போது, இருக்கையிலிருந்து எழுந்து நின்று இரு கைகளையும் கூப்பி நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கிறார். அப்போது, ‘‘நான் எந்த பார்ட்டியிலும் இல்லை. தயவு செய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்’’ என்று கூறுகிறார்.
அதை தொடர்ந்து அவர் பேசியதாவது நிர்மலா சீதாராமன், ‘ “உள் நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி உணவகத்தில் சாப்பிடுபவர்களை பற்றி வெளியில் சொல்லக்கூடாது.., அதிலும் ஒரு சட்டமன்ற உறுப்பினரை எப்பவும் வந்து இலவசமாக சாப்பிட்டு விட்டு., காசு கொடுக்காம போறாங்க, ஜிஎஸ்டி பற்றி கேட்குறாங்க என என்னிடம் முறையிட்டால் அதற்கு நான் என்ன பதில் கொடுக்க முடியும்..
அதுவே நீங்கள் ஜிஎஸ்டி பற்றி என்ன கேட்டாலும் நான் டக்கு டக்குனு பதில் சொல்லி இருப்பேன்’’ ஆனாலும் இந்த வீடியோவில் ஆடியோ என்பது சரியாக கேட்கவில்லை. கோவையின் பிரபல தொழிலதிபரான அன்னபூர்ணா சீனிவாசன், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ காட்சிகளை பாஜவைச் சார்ந்த ஐடி விங் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.
ஒரு பிரபல தொழிலதிபரை ஜிஎஸ்டியை பற்றி கேள்வியை கேட்ட ஒரே காரணத்திற்காக அவருக்கு மிரட்டல் விடுத்து அவரை மீண்டும் நேரில் வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தமிழக மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது நிர்மலா சீதாராமனின் ஆணவத்தை குறிப்பதாக நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கண்டங்கள்., மற்றும் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளது..
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இதுகுறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார் “கோவை அன்னபூரண ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மிரட்டப்பட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டிருக்கிறார்.. ஒரு மத்திய அமைச்சரிடம் சரியான கேள்விகளை கேட்க தைரியம் இருந்த அவரால் எப்படி அடுத்த நாளே மன்னிப்பு கேட்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.. மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, திமுக, அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் காட்டு தீயாக பரவி வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார்..
இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழகத்தின் அடித்தட்டு மக்கள் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் செய்தவர்கள் எல்லாம் ஜிஎஸ்டி வரி விதிப்பால் தங்களுடைய நிறுவனங்களை நடத்த முடியாமல் நடுத்தெருவிற்கு வந்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த நடவடிக்கை தமிழகம் முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பதவித் திமிர் இப்படியெல்லாம் செய்ய வைக்கிறது. இன்னும் எவ்வளவு நாட்கள் தான் என்று பார்ப்போம். ஜிஎஸ்டி வரி விதிப்பில் வேறுபாடு சிரமமாக இருக்கிறது.. என சுட்டிக் காட்டியதற்கு, ஒரு தொழிலதிபரை வரவழைத்து என்ன சொல்லி மன்னிப்பு கேட்க வைத்தார்களோ என்றும், இந்த மண்ணின் உயிர்நாடியே அதிகாரத்தை கேள்வி கேட்பதுதான் என்றும் சமூக வலைதளங்களில் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது.
மக்களை சந்திக்காமல் பின்வாசல் வழியாக ஒன்றிய அமைச்சர் பதவியை பெற்றவருக்கு மக்களின் கஷ்டங்கள் பற்றிய கவலை எப்படி வரும் என்றும், அதனால்தான் தன்னை எதிர்த்து கேள்வி எழுப்புபவர்களை மிரட்டுவதை கையில் எடுத்திருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் அவருக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..