பைக்கால் ஏற்பட்ட தகராரு..!! கொலையில் முடிந்த சம்பவம்..!! பரபரப்பான திருவள்ளூர்..!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே சரித்திரபதிவேடு குற்றவாளி வெட்டிகொலை செயபட்டுள்ள நிலையில் அவரது அண்ணன் தலையில் வெட்டுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆத்தூர் மேடு பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான தனுஷ் (வயது 22) கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். தம்பியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த தனுஷ் அண்ணன் வினித்தை தலையில் பலமாக தக்கியுள்ளனர்..
இரத்த வெள்ளத்தில் கிடந்த வினித்தை அப்பகுதி மக்கள் மீட்டு 108 அம்புலன்ஸ் உதவியுடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் தனுஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் வினித் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது கடந்த சில நாட்களுக்கு முன் தனுஷ் தமது அண்ணன் வினித்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அதே ஊரை சேர்ந்த குமார் என்பவரது லாரி மீது மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் லாரி உரிமையாளர் குமார் இருசக்கரவாகனத்தை பழுதுபார்த்து தருவதாக கூறியுள்ளார்.
விபத்து நடந்து ஒருவாரமாகியும் இருசக்கர வாகனம் பழுது பார்த்து தராததால் தனுஷ் இதுகுறித்து லாரி உரிமையாளர் குமாரிடம் செல்போனில் பேசிய போது தகராறு ஏற்பட்டு கொலை நடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் லாரி உரிமையாளர் குமார், கார்த்திக், மணிகண்டன், அய்யப்பன், சந்தோஷ், மோகன்குமார் ஆகிய 6பேரை நேற்று இரவு கைது செய்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..