“இலந்தை பழம் பறிப்பவர்களை வனவிலங்குகள் தாக்கும் அபாயம்-நீலகிரி”
நீலகிரி மாவட்டம் வனப்பகுதிகளில், இலந்தை பழம் தேடி வரும் கரடி போன்ற விலங்குகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை, மசினகுடி, மாயார்,மாவநல்லா பகுதிகளில், தற்போது இலந்தை பழம் சீசன் துவங்கி உள்ளது. உணவுக்காக ஏராளமான பறவைகள் இப்பகுதிக்கு வர துவங்கியுள்ளன.
மான்,குரங்கு ,கரடி போன்ற ஆபத்தான விலங்குகளுக்கும் இவை முக்கியமான உணவாக உள்ளது.
அதில், இரும்பு சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளதால் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் இதனை பறித்து உண்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‘இந்த பழங்களை பறிக்க செல்பவர்களை கரடி போன்ற ஆபத்தான விலங்குகள் தாக்கும் ஆபத்து உள்ளது,’ என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே. இவ்வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள், வனப்பகுதிகளுக்குள் சென்று இலந்தை பழங்களை பறிப்பதை தவிர்க்க வேண்டும், எனவும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.