தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிழத்தனர். இந்த நிலையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து சட்டசபையில் அறிக்கை வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து, சட்டசபையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், இச்சம்பத்தில் தொடர்புடைய
அனைவரும் நிச்சியம் கூண்டில் ஏற்றப்படுவார்கள். அ.தி.மு.க அரசு இந்த போராட்டத்தை சரியாக கையாளவில்லை என்றும் இந்த சம்பவம் தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைத்துள்ளது என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் தொலைக்காட்சியை பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சகத்தை கையில் வைத்துக்கொண்டுபேச்சும் பேச்சா என நாடே கேள்வி எழுப்பியது. தற்போது அ.தி.மு.க. அரசால் அமைக்கபட்ட ஆணையம் தான் உண்மையை வெளிகொண்டு வந்துள்ளது. துப்பாக்கி சூட்டால்உயிரிழந்த13பேரின் குடும்பத்தார்களுக்கு மேலும் 5 லட்சம் ருபாய் அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் கூறினார்.