அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 9900 வாக்குகளில் 7897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட சசி தரூர் 1000 வாக்குகளை பெற்றார். மேலும் பதிவான 416 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இன்னிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜுன கார்ககேவை சசி தரூர் வாழ்த்தி கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். மேலும் , காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று பிற்பகல் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.