நேற்று காலை நடந்த சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக்கோரி சபாநாயகர் அப்பாவுவிடம் இ.பி.எஸ்.ம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சார்பில் கடிதம் வழங்கப்பட்டது. இக்கடிதத்தை சபாநாயகர் அதனை மறுத்ததால் நேற்று இ.பி.எஸ்.ம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அமளியில் ஈடுபட்ன நிலையில் அவர்களை அவை காவலர்கள் வெளியேற்றினர்.
இதை கண்டித்து இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி இ.பி.எஸ். சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதனை காவல் ஆணையம் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்று நிராகரித்தது. இதனால் நேற்று முதலே வள்ளுவர் கோட்டத்தில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டது. காவல் துறையின் உத்தரவை மீறி போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை இ.பி.எஸ்.ம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி மீறி போராட்டம் நடைபெற்ற நிலையில் போராட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்தித்து பேசுகையில், ஜனநாயக முறைப்படி அனுமதி கேட்டும் காவல் துறை அதனை மறுத்துள்ளது. சபாநாயகர் அப்பாவு ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயற்படுகிறார். என்று அவர் கூறினார்.