ஆடி கடைசி வெள்ளி இந்த வழிபாடு அவசியம்..!
இன்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி.., இந்த வாரம் கடைசி ஆடி வெள்ளி என்பதால் அம்பாளை கட்டாயம் தரிசனம் செய்ய வேண்டிய ஒரு வாரம். உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வ அம்மன் கோவிலுக்கு காலையிலே செல்ல வேண்டும்.
சென்று பஞ்ச முக விளக்கை ஏற்ற வேண்டும்.., நெய் தீபம் ஏற்றினால் இன்னும் சிறந்த பலன் கொடுக்கும். முடிந்த அளவிற்கு மாவிளக்கு ஏற்றினால்.., நினைத்த காரியம் நிகழும். அம்மனுக்கு மிகவும் பிடித்த செந்நிற மலர்கள் கொண்டு அர்ச்சனை கொடுக்கலாம்.
கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள்.., வீட்டிலேயே குத்து விளக்கில் பஞ்சமுக திரி வைத்து ஏற்ற வேண்டும்.., பின் அம்மனின் பாடல் ஒலிக்க குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும், முடிந்த அளவிற்கு ஐந்து சுமங்கலிகளுக்கு ஜாக்கெட் பிட் எடுத்து கொடுத்து வழிபாடு செய்யலாம்.
முக்கியமாக கோவிலுக்கு சென்றாலும் சரி அல்லது வீட்டிலேயே வழிபட்டாலும் சரி அம்மனுக்கு நைவைத்தியமாக பால் பாயசம், கேசரி மற்றும் பொங்கல் படைத்து தீப ஆராதனை செய்து, குழந்தைகளுக்கு பிரசாதமாக கொடுக்கலாம். இதை செய்தால் நினைத்த செயல் நிகழும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..