கண் நோயை தீர்க்கும் எண்கண் முருகன்…!
எண்கண் திருத்தலத்தில் இருக்கும் முருகனை மாதம் மாதம் வரும் விசாக நட்சத்திரத்தில் வந்து முருகனை அர்ச்சணை செய்து வந்தால் கண் நோய் தீருமாம். முருகனை வடித்த சிற்ப்பிக்கு கட்டை விரலும் கண்ணும் தெரியாது.
இந்த முருகன் சிலையை செதுக்கிய சிற்பியின் ஜீவசமாதி இந்த திருத்தலத்திலே அமைந்துள்ளதாம். இந்த சமாதிக்கு அருகில் உள்ள மரம் இரண்டு முறை சாய்ந்து பின் துளிர் விட்டு வளர்ந்தது இங்கு அனைவராலும் அதிசயமாக பார்க்கப்படுகிறது.
முருகன் சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. இங்கு முருகன் ஆறு முகத்தையும் 12 கரங்களையும் கொண்டுள்ளார். முத்தரசசோழன் என்ற அரசருக்கு முருகன் 6 முகங்களோடும் 12 கரங்களோடும் மயில் மீது அமர்ந்துள்ளது போல ஒரு சிலையை வடிவமைக்க விரும்பினார்.
அப்போது அந்த அரசர் சிற்பி ஒருவரை அழைத்து இதுமாறி ஒரு சிலையை வடித்து எடுத்தார், பிறகு அந்த அரசர் அந்த சிற்பியின் கட்டை விரலை வெட்டி இதுமாறி முருகனை நீ எங்கும் செய்தல் கூடாது என்றார்.
அந்த சிற்பி எட்டுக்குடிக்கு வந்து மற்றொரு முருகன் சிலையை செய்கிறார், இதை அறிந்த அரசன் சிற்பியின் கண்ணையும் எடுத்துவிடுகிறார். பின் கண்ணையும் விரலையும் இழந்த அந்த சிற்பிக்கு அசரீரி ஒன்று கேட்கிறது, அது அஷ்டநேத்திரபுரத்திற்கு சென்று “ஒரு முருகன் சிலையை செய்” உனக்கு கண்ணும் விரலும் கிடைக்கும் என்றது.
ஆனால் சிற்பிக்கு அஷ்டநேத்திரபுரத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்று தெரியாமல் தவிக்கிறார். அப்போது முருகனே ஒரு பெண் குழந்தையாக மாறி அவருக்கு வழி சொல்கிறார்.
பின் சிற்பி முருகன் சிலையை செய்து முடிக்கிறார். முருகன் சிலையின் கண்ணை திறக்கும் சமையத்தில், அந்த சிற்பி எனக்கே கண் இல்லை நான் எப்படி உன் கண்ணை திறப்பேன் என்று சொல்லி அழுகிறார். அப்போது முருகப்பெருமான் அந்த சிற்பியின் எண்ணத்தில் கண்ணை திறக்கிறார், அப்போது உளி முருகப்பெருமானின் கட்டை விரலில் பட்டு ரத்தம் அதிகமாக வர சிற்பிக்கு கண்ணும் கட்டை விரலும் கிடைக்கிறது.
அப்போது “எனக்கு கண் கொடுத்த முருகா” என சிற்பி சொன்னது எண்கண் என இந்த ஊருக்கு பெயர் வந்தது.
நாம் வேண்டும் வரத்தை அப்படியே நடத்திக் கொடுக்கும் முருகப்பெருமான் அமைந்துள்ள இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் எண்கண் என்ற ஊரில் அமைந்துள்ளது.