அவன் மீது மட்டும் ஏனோ இந்த அன்பு – எழுத்து கிறுக்கச்சி – கவிதை -8
அவனை பத்து மாதம் கருவில் சுமக்கவில்லை..,
ஆனால் அவன் கருவில் உருவான நொடியே
அவன் மீது அன்பு கொண்டேன்..

அவன் குரல் நான் கேட்கவில்லை..,
ஆனால் கருவில் அவனின் சிணுங்கல்களை ரசித்தேன்..

அவன் பாதம் பூமி தொடும் முன்னே..,
கருவில் உதைத்ததை ரசித்தவள்..
ஆயிரம் சவால்களை எதிர்த்தவள்
அவனை கையில் ஏந்திய போது பதைத்து நின்றாள்..,

கருவில் உருவான அவனை ரசித்த அவளோ..,
அவனை கண்டதும் சந்தோஷத்தில் கண்கலங்கி நின்றாள்..,
10மாதங்கள் தேக்கி வைத்த மொத்த அன்பையும் வார்த்தைகளால் அல்ல..
நெற்றி முத்தத்தால் மட்டுமே சொல்ல தோன்றும்..

பெற்ற மகனை போல தன் அக்காவின் மகனையும் நேசிக்கும் ஒவ்வொரு சித்திக்கும் இந்த கவிதை சமர்ப்பணம்..,
இந்த கவிதையை தங்கபிள்ளை சஸ்வின்-காக அவரது சித்தி சுஜி எழுதிய கவிதை..
-லோகேஸ்வரி.வெ

















