குழந்தையின் மனநிலை தவறாக மாற காரணம் இது தான்..! ஆபத்தில் முடியும்..!!
குழந்தைகளுக்கு ஏன் தற்கொலை செய்து கொள்ள தோன்றுகிறது..
பெரும்பாலான குழந்தைகளின் இறப்பிற்கு மன அழுத்தம் மட்டுமே காரணமாக இருக்கிறது. மது பழக்கமும் சில சிறுவர்களுக்கு காரணமாக அமைகிறது.
தற்கொலை ஒரே ஒரு காரணத்தினால் நிகழ்வது போல இருந்தாலும் உண்மையில் அதுவல்ல.
அனைத்து தற்கொலையின் பின்னணியிலும் வெவ்வேரு உளவியல் மற்றும் சமூக காரணிகள் உள்ளது.
மனஅழுத்தம் மட்டும் 90 சதவீதம் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது.
தற்கொலை எண்ணங்களை எவ்வாறு கண்டறிவது :
• சிலக் குழந்தைகள் எந்த நேரமும் கோவமாக இருப்பார்கள்.எதாவது கேட்டால் எரிந்து எரிந்து விழுந்தால் உடனடியாக அக்குழந்தையை கவனிக்க வேண்டும்.
• எதையுமே சரியாக முடிவெடுக்க முடியாமல் திணறுவது,குழம்பிபோய் இருப்பது போன்றவைகளும் இதில் அடங்கும்.
• எந்த விஷயத்தையும் பொறுமையாக ஆள தெரியாது.
• குழந்தைகளுக்கு அவர்களிடம் யாரேனும் உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ தவறாக நடந்து கொண்டால்,அவர்கள் அதை சமாளிக்க தெரியாமல் தற்கொலை எண்ணங்களை வளரச்செய்கிறார்கள்.
• படிப்பு குழந்தைக்கு வரவில்லை என்றால் பெற்றோர்கள் குடுக்கும் மன அழுத்தம் கூடஅவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது.
• தாய் தந்தைக்கு ஏற்ப்படும் பிரிவு,குழந்தைகளின் முன் போடும் சண்டைகள் கூட காரணமாக அமையும்.
• படிப்பு விஷயத்தில் எடுக்கும் தோல்விகள்,ஏமாற்றங்களை எதிர்கொள்ளமுடியாமல் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.
இதுபோன்ற குழந்தைகளை பாசத்துடனும், அரவணைப்புடனும் நாம் அவர்களின் மனக்குமுறல்களுக்கு செவி சாய்த்தோமேயானால் அவர்களின் மன பாரம் வெகுவாக குறைந்து மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவியாக இருக்கும்.
மேலும் அது போன்ற சமயங்களில் வாக்கு வாதங்களைத் தவிர்த்து அவர்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்பது மிகவும் சிறந்தது.
Discussion about this post