முகம் பளப்பளப்பாக இருக்க இத செய்ங்க..!
கடலை மாவு 1 ஸ்பூன், கால் ஸ்பூன் மஞ்சள் தூளுடன் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து ஒரு பேஸ்ட் செய்து கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு காயவிட்டு பின் அலச வேண்டும்.
இந்த கடலை மாவு பேஸ் பேக் சருமத்திற்கு பளப்பளப்பை தருகிறது.
சிலருக்கு முகத்தில் சரும துவாரங்கள் நிறைய திறந்தே இருக்கும் இதனை சரிச்செய்ய 1 ஸ்பூன் உளுத்தம் மாவு மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வேண்டும்.
இதனை தொடர்ந்து செய்து வர சரும துவாரங்கள் மூடிவிடும்.இருந்த இடமே தெரியாது.