திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் – கருட சேவையில் காட்சி..!!
மாமல்லபுரத்தை அடுத்து இருக்கும் திருவிடந்தையில் ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் நித்ய கல்யாண பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
கடந்த மே 4ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கிய இந்த விழா பிரம்ம உற்சவத்துடன் சிறப்பாக தொடங்கியது. தினமும் காலையும், மாலையும் அபிஷேகமும், தீப ஆராதனையும் செய்யப்பட்டு, பூ அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மக்களுக்கு காட்சி கொடுத்தார்.
இந்த உற்சவம் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடைபெற்றது. கடந்த மே 8ம் தேதி பெருமாள், நாச்சியார் திருகோலத்தில் பல்லக்கில் வீதி உலா சென்றார். பின் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இதனை தொடருந்து நேற்று மாலை கருட வாகனத்தில் வீதியுலா சென்றார், மேலும் நாளை காலை தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை காண ஆயிரம் கணக்கான பக்தர்கள் சுற்று எங்கிலும் இருந்து வந்து, தரிசனம் செய்து செல்வார்கள்.
வருகின்ற மே 13ம் தேதி தெப்போற்சவமும் நடக்க இருக்கிறது. மேலும் இவரை வணங்கி வந்தால் திருமணம் தோஷம் நீங்குமாம்
மேலும் இதுபோன்ற பல தெய்வீக தகவல்களை பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி
Discussion about this post