” தொழில் போட்டி காரணமாக நெசவு தொழிலாளி கொலை “
வாலாஜாபேட்டையில் தொழில் போட்டி காரணமாக பட்டுத்தறி நெசவு தொழிலாளியை கொலை செய்த அண்ணன் தம்பியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்த சீனிவாசன் பட்டுத்தறி நெசவு தொழில் செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், கிருஷ்ணா ஆகியோருக்கும், இடையே தொழில் போட்டி இருந்துள்ளது.
பிரகாஷ் குடும்பத்தில் நெசவுத்தொழில் நலிவடைந்ததால் அதற்கு காரணம் சீனிவாசன் தான் என எண்ணிய பிரகாஷ் மற்றும் கிருஷ்ணா இருவரும் சேர்ந்து சீனிவாசனை அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ரத்த காயங்களுடன் வெளியே வந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சீனிவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் பிரகாஷ், கிருஷ்ணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
