மெட்ரோவில் ஆட்டைய போட்ட திருடர்கள்..! இதுவரை பல லட்சம் ரூபாய்..!
சென்னை மேடவாக்கத்தில் மெட்ரோ பணிக்காக வைத்திருந்த 7-டண் இரும்பு பொருட்களை திருடிய இருவர் கைது, திருட்டுக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் திருடப்பட்ட இரும்பு பறிமுதல்.
சென்னையை அடுத்த மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் பிரதாண சாலையில் கடந்த மூன்று வருடமாக மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன, இங்கு பனி செய்வதற்க்காக இரும்பு ராடு, கேபில் ட்ரம், மற்றும் பல இரும்பு பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் ஈச்சர் வாகனம் மூலம் திருடி செல்வதாக மேடவாக்கம் மெட்ரோ உதவியாளர் சரணக்குமார் காவல் கட்டுபாட்டறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று பார்த்தபோது திருடிய இரும்பு பொருட்களுடன் அங்கிருந்து புறப்பட முயன்ற வாகனத்தை மடக்கி விசாரணை செய்ததில் மெட்ரோ பணியில் வேலை செய்யும் மாங்காடு பகுதியை சேர்ந்த காதர் அலிகான்(38) மற்றும் அவரது நண்பர் பிரான்சிஸ்(34 ) இருவரும் சேர்ந்து இரும்பு பொருட்களை திருடியது தெரியவந்தது.
இருவரும் ஈச்சர் வாகனத்தின் மூலம் சுமார் இரண்டு லட்சம் மதிப்புடைய 7-டண் எடைக்கொண்ட இரும்புப் பொருட்களை திருடி செல்ல முயன்றதும் தெரியவந்தது. பின்னர் இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
7-டண் இரும்பு பொருட்களுடன் திருட்டில் பயன்டுத்தப்பட்ட ஈச்சர் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..