ஜப்பானில் பரவி வரும் புதிய நோய்..! இதுவரை 977 பேர் உயிரிழப்பு..! நோயின் அறிகுறி இப்படி தான் இருக்கும்..!
ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் பரவி வருவதாகவும் கடந்த ஜூன் 2ம் தேதி முதல் நோயாளிகளின் பாதிப்பும் நோயின் வீரியமும் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நோய் தொற்று குறித்து ஆய்வு மேற்கொண்டதில் எஸ்.டி.எஸ். எனப்படும் ஸ்டிரெப்டோகாக்கல் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நோய் தொற்றால் இதுவரை 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்டறியபட்ட 48 மணி நேரத்தில் மனிதர்களுக்கு பெரும் பாதிப்பையும், மரணத்தையும் விளைவிக்க கூடிய அளவு வீரியம் உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென ஜப்பான் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த “ஸ்ட்ரெப் தொண்டை” என அழைக்கப்படும் நோய் முதலில் கன்னத்தில் வீக்கம் மற்றும் தொண்டை வலியை ஏற்படுத்தும், ஆனால் சில வகையான பாக்டீரியாக்கள் மூட்டு வலி மற்றும் வீக்கம், காய்ச்சல், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும். இது சுவாசப் பிரச்சனை, உடல் உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு போன்றவற்றை கூட ஏற்படுத்தக்கூடும்…
ஜப்பானைத் தவிர, பல நாடுகளில் ஸ்ட்ரெப்டோகாக்கல் நச்சு அதிர்ச்சி நோய்க்குறியின் சமீபத்திய பரவல்கள் ஏற்பட்டுள்ளன. 2022 இன் பிற்பகுதியில், குறைந்தது ஐந்து ஐரோப்பிய நாடுகள் உலக சுகாதார நிறுவனத்திடம், STSS ஐ உள்ளடக்கிய ஆக்கிரமிப்பு குழு A ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (iGAS) நோயின் பாதிப்பு அதிகரிப்பு குறித்து அறிக்கை அளித்தன. கோவிட் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து பாதிப்புகளின் அதிகரிப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது…
– லோகேஸ்வரி.வெ