அவை முற்றிலுமாக ஒழிக்கப்படும்..!! தவெக தலைவர் விஜய் உறுதி..!!
சென்னை பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் இன்று.. தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தலைவர் திரு. விஜய் அவர்கள் தலைமையில், பொதுச் செயலாளர் திரு ஆனந்த் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது…
இக்கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..
சுற்றுச்சூழல் பாதுகாப்பு :
தமிழ்நாட்டில் மணல் கொள்ளை, நிலத்தடி நீர்க் கொள்ளை. கனிம வளங்கள் கொள்ளை போன்றவற்றைத் தடுக்கச் சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படும்.
நகர – கிராம பேதம் களைய, மாநகரங்களில் மக்கள் தொகையைக் குறைக்கவும் மற்ற பகுதிகள் வளர்ச்சி அடையவும், மண்டலவாரியான பகுதிசார் வளர்ச்சிப் பரவலாக்கம் வழியாக மண்டலவாரியான துணை நகரங்கள் உருவாக்கப்படும்.
தொழிற்சாலைகள் உரிய விதிகளைப் பின்பற்றுவதையும் அவற்றின் கழிவுகள், அனுமதிக்கப்பட்ட அளவை மீறாமல் இருப்பதையும் கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் செயலிழந்து இருப்பதால் அந்த அமைப்பு சீரமைக்கப்படும்.
வனவிலங்குகள். பறவைகள் மற்றும் அழியக்கூடிய அபாய நிலையில் இருக்கும் அரியவகை உயிரினங்களைப் பாதுகாக்க. வனப் பரப்பளவு அதிகரிக்கப்படும்.
போதைப் பொருள்களை ஒழிக்கச் சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படும்.. தமிழ்நாட்டில் போதைப்பொருள்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..