இந்த வகையான விநாயகர் சிலைகளுக்கு அனுமதி இல்லை.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!
செப்டம்பர் 7ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடபடுகிறது. இந்தப் பண்டிகை ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படும்.
வீட்டில் இதற்கான விசேஷமாக பூஜை செய்து, விநாயகருக்கு பிடித்த பண்டங்களை சமைத்து நைவேத்தியமாக வைத்து கொண்டாடுவது ஒரு பக்கம் இருக்கும்.
மற்றொரு பக்கம் அவரவர் வசிக்கும் தெரு அல்லது சமூகங்கள் சின்ன சின்ன குழுவாக சேர்ந்தும் கொண்டாடுவார்கள். இதை தவிர்த்து சிறியது முதல் விண்ணை முட்டும் அளவுக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பார்கள்.
இந்தநிலையில் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார். அதன் பிறகு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று காவல் துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மேலும், மக்கக் கூடிய சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.