“மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது” முதலமைச்சர் ஸ்டாலின் நச் பதில்..!!
இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சராக இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கபோவதாக சில பேச்சுக்குள் வெளியான நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் கேட்டதற்கு “மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது” என நச் பதில் கொடுத்துள்ளார்..
சென்னை கொளத்தூரின் தலைமையிடமாக இருக்கும் புதிய வருவாய் வட்டத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் சில அறிக்கைகள் வெளியிடபட்டது..
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது “அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து கொளத்தூர் வருவாய் வட்டம் ஒன்றை புதிதாக அமைத்துள்ளோம்.. பெரவள்ளூர்., சிறுவள்ளூர் மாற்றும் கொளத்தூர் உட்பட 3 கிராமங்கள் இதில் சேர்ந்துள்ளது. இந்தா பகுதிகளில் மாட்டும் 3 லட்சத்து 78 ஆயிரத்து 168 பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.,
அவர்களுக்கென்று கொளத்தூரில் பொதுப் பிரிவு, சமூகப் பாதுகாப்பு பிரிவு, நகர்ப்புற நிலவரித் திட்டம், வட்ட கலால் அலுவலகம், நில அளவை பிரிவு உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கொளத்தூரில் புதியதாக அமைகபடவுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் , புதிய வருவாய் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உட்பட 36 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடரா செலவினங்களுக்கு 32 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால் அதற்கான பணிகள் விரைந்து நடத்தப்பட்டு வருகிறது..
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவரது சட்டமன்றத் தொகுதியான கொளத்தூரில் இன்று பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து அதனை ஆய்வு செய்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து கொளத்தூரில் உள்ள சில தொகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் அதன்பின் புதிய சமுதாய நலக்கூடக் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார் .
இந்த பணிகளை ஆய்வு செய்ததை தொடர்ந்து 4.23 கோடியில் கட்டப்பட்டுள்ள தொடக்கப் பள்ளி, புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களை முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்., கொளத்தூரில் வரவுள்ள திட்டங்கள் குறித்து விவரித்தார்., அப்போது அடுத்த துணை முதலமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என அரசியல் வட்டாரங்களில்., பேசுபொருள் ஆகியுள்ளது. அதற்கு உங்களுடைய கருத்துகள் என என்று நமது ரிப்போட்டர் எழுப்பிய கேள்விக்கு
“மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது” எனப் பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து, வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், “அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்ட தெளிவான விளக்கமே வெள்ளை அறிக்கைதான்” எனப் பதிலளித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..