மறைந்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி நினைவேந்தல் நிகழ்ச்சி…!! தலைவர்கள் மரியாதை..!!
இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் சீத்தாராம் யெச்சூரி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடந்த செப்டம்பர் 13ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.. நாடாளுமன்றத்தின் போது வாழ்நாள் போராளியான கொள்கை வீரர், அருமைத் தோழர் சீத்தாராம் யெச்சூரி..
அவர்களின் மரியாதை செலுத்தும் விதமாக மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரியின் பட திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சியினரிடையே முரண்பாடுகள் இருந்தாலும் பாஜகவை விழ்த்த வேண்டும் என தீர்க்கமாக கூறியவர் எனவும் சீதாராமன் யெச்சூரி விட்டுச்சென்ற பணிகளை நாம் தொடர வேண்டும் என்றார்..
நாடாளுமன்றத்தின் போது வாழ்நாள் போராளியான கொள்கை வீரர், அருமைத் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அதிர்ச்சிக்குரியதாக அமைந்திருக்கிறது. அவர்கள் சென்னையிலே படித்தவர். பலநேரங்களில் நம்முடன் தமிழில் உரையாடியவர். கொள்கைப் பயணத்திலே ஒன்றாகப் பயணித்தவர்.
அப்படிப்பட்ட ஓர் அரிய மாவீரர் மறைந்தார் என்பதை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இயற்கையின் கோணல் புத்தி என்று தந்தை பெரியார் சொல்லுவார். அப்படிப்பட்ட உணர்வுகள். அதுவும் ஜனநாயகம் முட்டுச்சந்திலே மாட்டிக் கொண்டிருக்கக் கூடிய இந்த காலகட்டத்திலே, அதை எதிர்த்துப் போர்த் தளபதிகளில் ஒருவராக போர்க்களத்திலே களமாடினார். அப்படிப்பட்ட ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பு! என்றாலும் எதிர்கொள்வோம்.
அவர்கள் நினைத்த ஒரு புதிய பொதுவுடமை, சமதர்மச் சமுதாயத்தைப் படைக்க நாம் ஒன்றுபட்டுப் பாடுபட்டு வென்று காட்டுவோம். அதுதான் அவருக்கு நாம் சூட்டுகின்ற காணிக்கை மாலையாகும்.
தோழர் சீதாராம் யெச்சூரி என்று சொன்னால், என் நினைவிற்கு முதலில் வருவது இந்த ஒரு விஷயம் மட்டும் தான் நம்முடைய கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது செம்மொழி மாநாடு கோவையில் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற அவர் கலைஞரிடம் சொன்ன முதல் வார்த்தை “தமிழ்நாட்டில் எனக்கும் ஒரு பங்குண்டு” அதனால் இந்த நாடு முழுவதும் செம்மொழியை வளர்க்க செய்வேன் என தோழர் யெச்சூரி கூறியிருந்தார்…
இடதுசாரிகளின் கருத்தை மனதில் வைத்து அதனை தனது இறுதி மூச்சு இருந்த வரை கடைப்பிடித்த ஜனநாயகவாதியாக வாழ்ந்தார். தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள், தேவகவுடா, குஜ்ரால் ஆகியோர் பிரதமர்களாக பதவி வகித்த காலத்தில் இடதுசாரிகளின் பங்களிப்புக்குப் பின்னணியில் இருந்து பெரும் பங்காற்றியவர். இன்று இந்திய கூட்டணி உருவானதற்கு முழு காரணமே சீதாராம் யெச்சூரி மட்டும் தான் என இவ்வாறே முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்…
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி பத்திரிகையாளர் என்.ராம் மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..