இலங்கை சிறைபிடித்த 45 படகிற்கு ரூ. 2.62 கோடி நிவாரணம்..!
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 45 படகுகளுக்கு நிவாரணமாக ரூ. 2.62 கோடி அளிக்க தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. இதற்காக படகு உரிமையாளர்களின் ஆவணங்களை அதிகாரிகள் அய்வு செய்கிறார்கள்.
ராமேஷ்வரம் முதல் நாகை வரை உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு வைத்திருக்கும் மீனவர்கள் மீன்கள் அதிகமாக உள்ள பாக்ஜலசந்தி கடலில் மீன்களை பிடிப்பதை வழக்கமாக உள்ள நிலையில் சில நேரங்களில் இவர்கள் எல்லை மீறி மீன் பிடிப்பதாக இலங்கை படையினர்கள் இவர்களின் படகுகளோடு சிறை பிடித்து செல்கிறார்கள்.
இந்நிலையில் இதுவரை இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகள் 150 க்கும் மேல் உள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவிர்ப்பதால் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு வைத்திருப்பவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் மற்றும் ரூ. 6 லட்சம் நிவாரணமாக வழங்க உள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பாம்பன் கடற்கரையில் இருந்து 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை மீன் பிடிக்க சென்ற 43 விசைப்படகுகள் மற்றும் 2 நாட்டுப்படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்தது. அப்போ சிறைப்பிடித்த படகுகளின் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு ரூ. 2.62 கோடியை வழங்க உள்ளது.
இந்நிலையில் ராமேஷ்வரத்தில் நேற்று தாலுக்கா ஆபிஸில் படகு உரிமையாளர்களின் ஆதார் அட்டை, ஆர்,சி,புக், வங்கி கணக்குகளின் விவரங்களை மீன்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த நிவாரணமானது வரும் தீபாவளிக்குள் வங்கியின் மூலம் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.