கல்லூரி மாணவர்களிடையே ரயில் ரூட் தகராறு.. மாணவன் கொலை..!
சென்னை கீழ்ப்பாக்கம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியான பெரியமேடு அருகே பார்க் ரயில் நிலையத்தில் பீச்ஜ் ஸ்டேஷனில் இருந்து திருத்தணி செல்லக்கூடிய ரயிலில் கல்லூரி மாணவன் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் வந்ததை கண்டு பொது மக்கள் அருகே உள்ள பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தனர்.
சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மாணவனை 108 ஆம்லென்ஸ் மேலும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர் பின்னர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சிகிச்சை பெற்றுவரும் நபரான சுந்தர் என்பதும் மாநில கல்லூரில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது
சுந்தரின் நண்பரான தாவுத் என்பவரையும் இதற்கு முன்பே ரயிலில் வரும் போதும், போகும் போதும் மர்ம கும்பல் தாக்கி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது மேலும் இன்று காலை தாவூத் என்பவர் ரயிலில் பயணம் செய்யாததால் மாநில கல்லூரி சுந்தர் என்கிற மாணவனை, அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி சென்ற CCTV கேம்ரா காணொளிகளை கொண்டு விசாரித்ததில் பச்சையப்பன் கல்லூரியில் அதே 2வது ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர்கள் 5 பேர் என்பதும் தெரியவந்துள்ளது.
கல்லூரி மாணவர்களிடையே இருக்கும் பஸ் ரூட் தல என்பது போல் ரயில்க்கே ரூட் தல இனி நாங்கள் தான் என பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து வெவ்வேறு கல்லூரிகளில் பட்டாகத்தி உடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை அடுத்து மாநிலக் கல்லூரி மாணவன் சுந்தர் என்பவர் மீது தாக்குதல் நடத்திய திருத்தணி பகுதியை சேர்ந்த ஈஸ்வர் , சந்துரு, கம்லேஷ், புஜ்ஜி, ஹரிபிரசாத், இவரஜ் ஆகிய மாணவர்கள்தான் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது
இவர்களை விரைந்து பிடிக்க கீழ்பாக்கம் மாவட்ட துணை ஆணையர் தலைமையிலும் வேப்பேரி சரகம் உதவி ஆணையர் கண்ணன், மற்றும் பெரியமேடு காவல் ஆய்வாளர் திருமலை,உதவி ஆய்வாளர் கோபி முன்னிலையில் தனிப்படை போலீசார் மூலம் 5 பேர் கொண்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாநில கல்லூரி மாணவர் சுந்தர் என்பவர் இன்று அதிகாலை உயிரிழந்ததை அடுத்து தாக்குதல் வழக்கு கொலை வழக்காக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது