குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் மூஸ்…!
உப்பு இல்லாத வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
டார்க் சாக்லேட் – 200 கிராம்
பிரெஷ் கிரீம் – 250 மில்லி
உப்பு – 1 சிட்டிகை
வெண்ணிலா எசென்ஸ் – 1/4 தேக்கரண்டி
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து சூடாக்கி உப்பு இல்லாத வெண்ணெய் மற்றும் டார்க் சாக்லேட் சேர்த்து உருக்கிக் கொள்ள வேண்டும்.
சாக்லேட் உருகியதும் நன்றாக ஆறவிட வேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் பிரெஷ் கிரீம், உப்பு, வெண்ணிலா எசென்ஸ் மற்றும் உருக்கிய சாக்லேட் கலவையை சேர்த்து வேகமாக பீட் செய்தல் வேண்டும்.
இதை கண்ணாடி கப்பில் நிரப்பி 5 மணி நேரத்திற்கு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
பின் சாப்பிடும் நேரத்தில் சாக்லேட் துண்டுகள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி மேலே வைத்து பரிமாறலாம்.
