சீஸ் தந்தூரி சிக்கன் ரோல் ரெசிபி.. ஸ்நாக்..!
தேவையான பொருட்கள்:
- எலும்பில்லாத சிக்கன் 500 கிராம்
- கெட்டியான தயிர் 1 கப்
- தந்தூரி மசாலா 3 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
- உப்பு தேவையானது
- வெஜிடெபிள் ஆயில் 3 ஸ்பூன்
- பரோட்டா 4
- தக்காளி 1 கப் நறுக்கியது
- வெங்காயம் 1/2 கப் நீளமாக நறுக்கியது
- சீஸ் 1 கப்
- பாக்பிக்யூ சாஸ் 5 ஸ்பூன்
- புதினா சட்னி 5 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை 1/2 கப்
- வெண்ணெய் தேவையானது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கெட்டியான தயிர் சேர்த்து நன்றாக விஸ்க் பயன்படுத்தி அடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் தந்தூரி மசாலா, எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் இதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கல்ந்து விட்டு ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு உருகியதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேகவைத்து தனியே எடுத்து வைக்கவும்.
பரோட்டாவை சூடு செய்து, பின் பரோட்டா மீது பார்பிக்யூ சாஸ் தடவி, பின் புதினா சட்னி, வேகவைத்த சிக்கன், தக்காளி, வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து அதன் மேலே சீஸ் சேர்த்து அதன் மேல் கொஞ்சமாக புதினா சட்னி தடவ வேண்டும்.
பரோட்டாவை அப்படியே இருக்கமாக சுருட்டி ஒரு ஃபேனில் வைத்து வெண்ணெய் சிறிது விட்டு பரோட்டா பொன்னிறமாக சிவந்ததும் எடுத்து தட்டில் வைக்கவும்.
அவ்வளவுதான் சீஸ் தந்தூரி சிக்கன் ரோல் தயார்.