டேஸ்டியான பிஸ்கட் அல்வா ரெசிபி..!
பிஸ்கட் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு பொருளாகும். அப்படி நமக்கு பிடித்த பிஸ்கட்டை வைத்து எல்லாருக்கும் பிடித்த அல்வா ஒன்றை செய்யலாம் வாங்க..
வீட்டில் பண்டிகை நாட்களில் சுலபமாக இந்த பிஸ்கட் அல்வாவை செய்து கொடுத்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்க..
தேவையான பொருட்கள்:
- ஒரு லிட்டர் பால்
- பிஸ்கட்
- இரண்டு கரண்டி நெய்
- ஒரு கப் சர்க்கரை
- 15 முந்திரி பருப்பு
செய்முறை:
- ஒரு மிக்ஸி ஜாரில் உங்களுக்கு விருப்பமான பிஸ்கட்டை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் அரைத்த பிஸ்கட்டை சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் அதில் முந்திரிகளை சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.
- பின் அதே வாணலில் பிஸ்கட் கலவையை சேர்த்து கொதிகவைத்து கிளற வேண்டும்.
- பின் சர்க்கரை சேர்த்து கிளறி கொள்ள வேண்டும்.
- கலவை நன்றாக திரண்டு வந்ததும் வறுத்த முந்திரி சேர்த்து கிளறிவிட்டு சிறிது நெய் சேர்த்து கலந்துவிட்டு இறக்க வேண்டும்.
- ஒரு தட்டில் நெய் தடவி அல்வாவை சேர்த்து சமமாக தேய்த்து வெட்டிக் கொள்ள வேண்டும்.
- அவ்வளவுதான் சுவையான பிஸ்கட் அல்வா தயார்.