தரி கஞ்சி ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
நெய் 1 ஸ்பூன்
ரவை அரை கப்
தண்ணீர் 1 1/2 கப்
பால் 1 லிட்டர் (காய்ச்சியது)
சர்க்கரை அரை கப்
உப்பு தேவையானது
ஏலக்காய்த்தூள் 1 சிட்டிகை
நெய்
முந்திரி
சின்ன வெங்காயம்
திராட்சை
செய்முறை:
ஒரு வாணலில் நெய் ஊற்றி அதில் ரவை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
பின் அதில் நீர் சேர்த்து ரவையை வேகவைக்கவும்.
பின் பால் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொதிக்க வைக்கவும்.
பின் அதில் சர்க்கரை,உப்பு,ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும்.
ஒரு வாணலில் நெய் சேர்த்து முந்திரி,வெங்காயம்,திராட்சை ஆகியவற்றை ஒன்று ஒன்றாக சேர்த்து வறுத்து அதனை கஞ்சியில் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் சுவையான தரி கஞ்சி தயார்.