சுவையான வெங்காய சாதம் செய்யலாமா..!
பாஸ்மதி அரிசி – 1 கப்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வேர்க்கடலை – 1/2 கப்
முழு பூண்டு – 1
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டிகூகிங்க்
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையானவை
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 4 நறுக்கியது
தண்ணீர் – 1/4 கப்
கறிவேப்பிலை
புளி தண்ணீர் – 1/4 கப்
கொத்தமல்லி இலை
முதலில் பாஸ்மதி அரிசியை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து வடித்து வைக்கவும்.
அடுப்பில் ஒரு வாணலை வைத்து எண்ணெய் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும்.
பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,பெருங்காயத்தூள், உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் கறிவேப்பிலை மற்றும் புளி தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
கொதிக்கவைத்து பின் வடித்த சாதம் சேர்த்து கிளறவும்.
பின் இறக்கும் சமையத்தில் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்கவும்.