செட்டிநாடு ஸ்டைல் பீட்ரூட் கோலா உருண்டை..!
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் 2
பொட்டுகடலை 3/4 கப்
வெங்காயம் 1/2 கப்
பச்சை மிளகாய் 1
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பற்கள்
சீரகம் 1/2 ஸ்பூன்
சோம்பு 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி இலை சிறிது
மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
எண்ணெய் தேவையானது
உப்பு தேவையானது
செய்முறை:
முதலில் பொட்டுகடலையை லேசாக வறுத்து பின் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பீட்ரூட் சுத்தம் செய்து கழுவி துருவிக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
அதில் துருவிய பீட்ரூட் சேர்க்கவும்.
பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந்து ஒரு ஐந்து நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.
பின் அடுப்பை அணைத்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக பொட்டுகடலை மாவை கலந்து உருண்டை பிடிக்கும் பதத்திற்கு செய்து கொள்ள வேண்டும்.
பின் அனைத்தையும் கைகளால் உருண்டை பிடித்துக் கொள்ளவும்.
ஒரு ஃபேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருண்டைகளை போட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் பீட்ரூட் கோலா உருண்டை தயார்.